யாழ்.பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக வளாகச் சூழலில் பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸாரும் நிலைகொண்டுள்ளனர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே இவ் இராணுவப் பிரசன்னம் இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.
இருப்பினும் பல்கலையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூறி இன்று முற்பகல் 11 மணியளவில் நினைவஞ்சலிப்பிரார்த்தனை இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
2009 மே 18 இறுதிப்போரில் உயிர்நீத்த மக்களின் ஆத்ம சாந்தி வேண்டிபல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் இணைந்து இந்த அஞ்சலி நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தனர்.
இராணுவம் மற்றும் பல தரப்பினரின் கடுமையான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஏராளமான மாணவர்கள், விரிவுரையாளர்கள் கலந்து நினைவுச்சுடர் ஏற்றி அமைதியான முறையில் உயிர் நீத்தவர்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
தொடர்புடைய செய்தி
4 ஆம் மாடிக்கு வருமாறு இராசகுமாரனுக்கு அழைப்பு
நினைவேந்தலை கைவிடுங்கள்! நிகழ்ந்தால் இராணுவம் தலையிடும்!- யாழ். இராணுவத்தளபதி