Ad Widget

பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு மீட்பு!!

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பலியான கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த சிசு அறுவை சிகிச்சை மூலம் மீட்கப்பட்டுள்ளது.

isrel-gaza

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்கள் 850க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சுக் குழந்தைகள்.

உக்கிரமாக நடக்கும் இந்தப் போரில் நேற்று மத்திய காஸாவின் டெயிட் அல் பலாஹ் நகரம் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

இத்தாக்குதலில் கட்டிட இடிபாடிகளில் சிக்கி 23 வயதான நிறைமாதமான கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்தார். ஆனால், குழந்தை உயிருடன் இருந்ததை அறிந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அந்த சிசுவை வெளியில் எடுத்தனர்.

அந்த சிசு உயிர் வாழ்வதற்கு 50% சாத்தியக் கூறுகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இப்படியா அப்பாவிகளை பலியெடுப்பது என்ற கொந்தளிப்பும் பாலஸ்தீனர்களிடத்தில் இருக்கிறது.

உலகமும் இந்த இனப்படுகொலையை இன்னமும் வேடிக்கை பார்க்கிறதே!

Related Posts