Ad Widget

பருப்பு இறக்குமதி வரி குறைப்பு எண்ணெய் இறக்குமதி வரி ஏற்றம்!

இறக்குமதி செய்யப்படும் மைசூர் பருப்பு மற்றும் மஞ்சள் பருப்பு ஆகியவற்றுக்கான இறக்குமதி விசேட விற்பனை பொருள் வரி குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த பருப்பு வகைகளுக்கு அறவிடப்பட்ட வரி கிலோ ஒன்றுக்கு 5 ரூபாவில் இருந்து 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

உலக சந்தையில் பருப்பு விலை அதிகரிக்கும் போது தேசிய வியாபாரிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் இந்த நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, தேங்காய் எண்ணெய் தவிர்ந்த ஏனைய உணவுக்கு பயன்படும் இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வகைகளின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ கிராமுக்கு 90 ரூபாவாக இருந்த விசேட விற்பனை பொருள் வரி 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts