Ad Widget

பயங்கர ஆயுதங்களுடன் செயற்பட்ட சமூகவிரோதக் கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு, நால்வர் கைது!

யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைதுசெய்துள்ளனர் மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இக்குழுவைச் சுற்றிவளைத்தபோது அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்தவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடி விட்டனர் எனவும் அவர்களும் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் அவர் கூறினார்.

இவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 வாள்கள், 3 கொட்டன் பொல்லுகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கரவண்டிகள் ஆகியனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 

police - manippay

 

நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மானிப்பாய் சந்தையருகில் பொலிஸார் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது சந்தேகத்துக்கிடமான முறையில் அங்கு இளைஞர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர். பொலிஸார் விசாரிக்க முயன்றபோது அவர்களை தப்பியோட முயன்றனர்.

இதனையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடிவிட்டனர் என மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ றொகான் மகேஷ் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் சாவல்கட்டு, சுதுமாலை, மானிப்பாய் பகுதிகளை சேர்ந்த 18, 21, 24, 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிருஷ்ணா என்ற நபரின் வழிநடத்தலிலேயே இவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர். பணம்பெற்றுக் கொண்டு கூலிக்கு வாள்வெட்டு, அடிதடி என்பவற்றில் இவர்கள் ஈடுபட்டு வந்தது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

police - manippay- vaal

யாழ்மாவட்டத்தில் கடந்த பலவருடங்களாக செயற்பட்டு வந்த ஆவாக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் துனைக் குழுவாக இவர்கள் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மானிப்பாய் – சுதுமலைப் பகுதயில் கடந்த மாதம் பெண்னொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

 

police - manippay-bike

குறித்த நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை – யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளியில் கடந்த மாதம் 11ஆம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நாகராசா பார்தீபன் என்பவரின் கொலையுடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் மற்றொரு சமூக விரோதக் குழு தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இக்கொலைக்கும் பெரியதம்பி நிஷாந்தன் என்ற அந்தக் குழுவின் தலைவனுக்கு தெடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

கொலைக்கு பயன்படுத்திய வாள், மற்றும் கப்பமாக பெற்றுக்கொண்ட 2 லட்சம் ரூபாய் பணம் என்பவற்றையும் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளளர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts