Ad Widget

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான இளைஞன் விடுதலை

judgement_court_pinaiபயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ். மேல் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

உரும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த சாகரப்பிள்ளை பிரபாகரன் தமிழகன் (வயது 30) என்ற இளைஞரே, கடந்த 2009 மே மாதம் 15 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

இவர், கொழும்பு பிரதான நீதிமன்றில் அஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிராக வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களத்தினால், யாழ். மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து கடற்படை மீது தாக்குதல் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டே இவர் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர் அவரால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் யாழ். மேல் நீதிமன்றினால் 2013 ஆம் ஆண்டு யூலை மாதம் 18 ஆம் திகதியன்று நிராகரிக்கப்பட்டது.

அத்துடன்,இவருக்கு எதிரான வேறு சான்றுகள் உள்ளனவா என பரிசீலணை மேற்கொள்வதற்காக மேற்படி வழக்கு நேற்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மேற்படி வழக்கினை நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் அன்னலிங்கம் பிரேமசங்கர் இவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு வேறு சான்றுகள் முன்வைக்காத காரணத்தினால் குறித்த இளைஞரை விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்துள்ளார்.

இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related Posts