Ad Widget

பயங்கரவாதத் தடைச் சட்டம் கைவிடப்படும்!- ஜெனீவாவில் அரசாங்கம் தெரிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை செயப்படுத்துவதில்லையென இலங்கை அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் அறிவித்தல் விடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பிலான ஆலோசனை வழங்கியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சின் செயலாளர் மனோ தித்தவெல்ல நேற்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அறிவிப்புச் செய்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்காது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழீழ புலம்பெயர் செயற்பாட்டாளர்களிடம் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இருவர் கைது செய்யப்பட்ட போதிலும், பின்னர் அவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டதாகவும் மனோ குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் கடந்த 1978 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது 1982 ஆம் ஆண்டு நிலையான சட்டமாக செய்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஒரு கைதியை 18 மாதங்கள் தடுத்து வைத்திருக்க முடியும். புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் புலி உறுப்பினர்கள் 130 பேரும், சந்தேகத்தின் பேரில் 10 சிங்களவர்களும், புலனாய்வுத் துறை அதிகாரிகள் 8 பேரும் தடுத்து இதுவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Posts