Ad Widget

பனம் கைத்தொழில் போதனாசிரியர்கள் தாய்வானுக்கு

panai-palmyrah-kaithadyவடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பனம் கைத்தொழில் போதனாசிரியர்களில் தெரிவு செய்யப்படும் போதனாசிரியர்களை பனை அபிவிருத்திச் சபை தாய்வான் நாட்டுக்கு பயிற்சி பெறுவதற்கு அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளது என்று பனை அபிவிருத்தி சபைத்தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பனைசார் கைத்தொழில் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 25 போதனாசிரியர்களை தாய்வான் நாட்டுக்கு அனுப்பி வைக்கவுள்ளோம். அந்த நாட்டில் உள்ள வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள் இந்த 25 பேருக்கு உரிய பயிற்சிகளை வழங்குவர்.

புதிய வடிவமைப்புக்களை கற்றுக்கொண்டு வெளியேறுவதால் நாட்டில் சந்தை வாய்ப்பை அதிகரிப்பதோடு பொருளாதார வளர்ச்சியையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.

இந்தப் பயிற்சி நெறியில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள போதனாசிரியர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அமைச்சுக்கு விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட பின்னர் போதனாசிரியர்கள் தாய்வான் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த பயிற்சிகள் 3 நாள்கள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Related Posts