Ad Widget

பத்திரிகையாளர் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது: பாஸ்க்கரா

Deleip-amuthanஉதயன் பத்திரிகை அலுவலக செய்தியாளர் மீதான தாக்குதல் காட்டுமீராண்டித்தனமானது. இத்தகைய தாக்குதல் மீண்டும் மீண்டும் நடைபெற்றுவருகின்றது. தற்சமயம் வடமாகாணம் ஒரு தேர்தலை நோக்கியுள்ளவேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ் நிகழ்வை உலகநாடுகள் அக்கறையுடன் கவனிக்கவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி.பாஸ்க்கரா விடுத்துள்ள கண்டண அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

போருக்கு பின்னரான காலத்தில் அமைதி ஏற்படுகிறது என அரசு கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அன்றாடத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மீள்குடியேற்றம் அற்று அகதி வாழ்க்கை வாழும் மக்களை அரசு கண்டுகொள்வதே இல்லை. இவ்வேளையில் படைத்தரப்பு மயிலிட்டி வாழ் மக்களை தமது சொந்தஊர் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கியிருந்தது. மக்கள் சென்றபின் மக்களை செல்லவிடாது படைத்தரப்பு மறுத்தது உலகறிந்த விடயம். இந்த செய்திகளை உதயன் சார்பாக பரபரப்பாக வெளியிட்டவர் செய்தியாளர் திலிப். அச்செய்தி வந்த இருதினங்களில் இத்தாக்குதல் நடைபெற்றது பல கோணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது. முற்றுமுழுதாக பாதுகாப்பு வலையத்தினுள் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.

தனது அலுவலக வேலையை முடித்து வீடு சென்றபோது தாக்குதல் நடைபெற்றதானது படைத்தரப்பின் அனுசரணை இல்லாமல் நடத்தமுடியாது. படைத்தரப்பு தமக்கு தொடர்பு இல்லையாயின் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

வடமாகாணசபைத் தேர்தல் வரும் இவ்வேளையில் பத்திகைகள் உண்மையான செய்திகளை வெளியிடுவதை தடுப்பதற்கான ஒரு செயலாகவே இது உள்ளது. மேலும் பத்திரிகைகளை முடக்கி தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்புக்கு சவால் விடுவதற்காகவா? இதற்கான ஒரு முன்னேற்பாடா?என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவ் தாக்குதல் அடாவடித்தனம் சம்பந்தமாக உலகநாடுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மீண்டும் இத்தாக்குதல் நடைபெறாமல் பத்திரிகை சுதந்திரமாக இயங்க உலகநாடுகள் ஆவண செய்யவேண்டுமென பாஸ்கரா தெரிவித்தார்.

Related Posts