Ad Widget

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!

பண பரிவர்த்தனையின் போது கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக பண பரிவர்த்தனையின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் 18 பொலிஸ் அதிகார பிரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் நாட்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று அவதான நிலைமை காணப்படுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts