மாலபே சயிட்டம் நிறுவனத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணிதொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மக்கள் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வைத்தியர்கள் காலவரையறையின்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதி சிகிச்சைப் பிரிவில் மட்டும் வைத்தியர்கள் தமது சேவையில் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.