Ad Widget

பணமே இல்லாமல் ஓராண்டு வாழ்க்கை நடத்திய அதிசய பெண்

பணமே இல்லாமல் ஓராண்டு முழுவதும் தனது வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் இளம்பெண். நாட்டின் பொருளாதார அமைப்பு சீர்குலைந்து போனால் என்ன செய்வது என்று சிந்தித்ததன் விளைவுதான் இந்த ‘பணமில்லா வாழ்வு’ பரிசோதனை என்கிறார்.

greata

ஜெர்மனியைச் சேர்ந்தவர் க்ரேடா டெளபர்ட் (வயது 30). இவர் பத்திரிகைகளுக்கு செய்தி மற்றும் கட்டுரைகளை எழுதிவருபவர். பணமே இல்லாமல் ஓராண்டு முழுக்க வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்த அவர், உடனே அதை செயல்படுத்தவும் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது, “பணமே இல்லாமல் வாழ எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. மாற்று உள்ளாடைகளும், கழிவறைகளும்தான் முக்கிய சவால்களான இருந்தன. அருகிலிருந்த ‘செகண்ட் ஹாண்ட்’ கடைகளில் பண்ட மாற்று முறையில் எனக்குத் தேவையான உடை களை வாங்கினேன். மக்கள் ஒன்றாக இணைந்து பயிர் செய்யும் பொதுத் தோட்டத்தில் காய்கறி கள் பயிரிட்டேன். விடுமுறைக் காலத்தில் பார்சிலோ னாவுக்குச் செல்ல‌ 1,700 கிலோமீட்டர் தூரத்தை ‘லிஃப்ட்’ கேட்டே கடந்தேன். அவ்வளவு ஏன், எனக்கான ஷாம்பூவைக் கூட நானே தயாரித்துக் கொண் டேன்” என்றார்.

தன் ஓராண்டு அனுபவத்தை ‘ ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, “அளவில்லா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நமது பொருளாதாரத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. ஆனால் நமது இயற்கை குறிப்பிட்ட அளவுக்குத்தான் வளங்களைக் கொண்டிருக்கிறது. ‘இன்னும் அதிகம், இன்னும் அதிகம்’ என்ற மந்திரம் நம்மை வெகுதூரத் திற்கு அழைத்துச் செல்லாது” என்கிறார்.

இந்த ஓராண்டில் புதிய ஹிப்பிகள், சுற்றுச்சூழலியளா ளர்கள், ‘ப்ரெப்பர்’ என்று அழைக் கப்படுகிற எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பேரழிவை உணர்ந்து தற்போதே உணவுப் பொருட்கள் முதற்கொண்டு சேகரிப்பவர்கள் போன்றோரைச் சந்தித்து க்ரேடா டெளபர்ட் உரை யாடியிருக்கிறார்.

“இந்த ஓராண்டில் நான் கற்றுக்கொண்டதை வாழ்வில் நடைமுறைப்படுத்த முயற்சிக் கிறேன் என்றார்.

Related Posts