Ad Widget

பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்; அவர்கள் வன்னிக்கு வர தயக்கம்; கல்வியியலாளர்கள் விசனம்

graduationஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்ட பட்டதாரிகள் சிலர் இன்னமும் கடமையைப் பொறுப் பேற்காததால் வன்னிப் பகுதியில் தற்போதும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வியியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த 7 ஆம் திகதி 200 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவர்களில் 10 பேர் யாழ்.மாவட்டத்துக்கும் ஏனைய 190 பேரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கும் நியமிக்கப்பட்டனர்.

அவர்களில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களைத் தவிர ஏனையோர் இன்னமும் கடமையைப் பொறுப்பேற்காததால் வெளிமாவட்டங்களில் இன்னமும் ஆசிரியர் பற்றாக்குறையைச் சீர்செய்ய முடியாதுள்ளதாகவும் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கே ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஆயிரம் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் புதிதாக விஞ்ஞான பாடநெறியும் ஆரம்பிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் இன்றி விஞ்ஞான பாடநெறியைக் கற்க இயலாது மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எனவே அரசியல் இலாபம் கருதி இடமாற்றங்களை மேற்கொள்ளாமல் உரியவர்களை கடமையை பொறுப்பேற்க வழி வகுக்குமாறும் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த 7 ஆம் திகதி 200 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

Related Posts