Ad Widget

நோர்வே பிரதிநிதிகள் யாழ் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு

நோர்வே நாட்டின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ் குடா நாட்டுக்கான விஜயத்தினை நேற்று முன்தினம்(01) மேற்கொண்டு இவ்விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டது.

palay-army

பலாலியில் அமைந்துள்ள யாழ் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று முந்தினம்(01) இடம்பெற்ற இந்நிகழ்விலேயே நோர்வேயின் வெளிவிவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் திரு.டோர் ஹட்ரெம் மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் திரு.தொப்ஜோர்ன் கோஸ்டட்ஸ்சேதேர் ஆகியோர் அடங்கிய அதிதிகள் குழுவே யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவை சந்தித்தனர்.

இரு தரப்பினரிடையே இடம்பெற்ற சினேகபூர்வ சந்திப்பின் போது யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள், சிவில் நிர்வாக முறைமைகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் இராணுவத்தின் பங்கு என்பன தொடர்பில் யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியினால் பிரதிநிதிகள் குழுவிற்கு விளக்கமளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்நிகழ்வின் போது நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related Posts