Ad Widget

நைஜீரியா பள்ளிகூடத்தில் குண்டுவெடிப்பு – குறைந்தது 47 பேர் பலி

நைஜீரியாவின் வடகிழக்கிலுள்ள யோபே மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளிக்கூடமொன்றில் காலை நேரக் கூட்டத்துக்காக மாணவர்கள் ஒன்றுகூடிய நேரத்தில் குண்டொன்று வெடித்துள்ளது.

mapa_nigeria

குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த நிறைய பேர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.

பொடிஸ்கும் என்ற இடத்திலுள்ள அப்பள்ளியில் உடல்கள் சிதறிக் கிடக்க பெரும் துயரமும் குழப்பமும் காணப்படுவதாக சம்பவத்தைக் காண நேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் காலணிகள் குவியலாகக் கிடப்பதையும், இரத்தம் வழிந்தோடுவதையும் காண முடிகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

இத்தாக்குதலுக்கு இதுவரையில் யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பொடிஸ்கும் பகுதியில் இதற்கு முன்னர் பல தடவைகளில் இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்பினரான போக்கோ ஹராம் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மேற்குலக வடிவத்திலான கல்விமுறையை எதிர்க்கின்ற ஒரு ஆயுதக்குழு இது.

Related Posts