Ad Widget

நெல்சன் மண்டேலா அவர்கள் கோடான கோடி மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார் – டக்ளஸ்

KN-daklasமௌனிகளாகி தாமும் அத் துயரத்தை பகிர்ந்துக் கொள்ளும் கோடான கோடி உலக மக்களின் மன ஓட்டத்துடனும், இதய துடிப்புடனும் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தென்னாபிரிக்க ஜனாதிபதி மேதகு ஜகப் சூமா அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுப்பிய அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவ் அனுதாபச் செய்தியின் முழு விபரமும் பின்வருமாறு.

இந் நூற்றாண்டுகளின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா அவர்களின் இழப்பினால் உங்கள் தேசம் துயரத்தாலும், வேதனையாலும் துவண்டுபோய் சோகத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில், மௌனிகளாகி தாமும் அத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும் கோடான கோடி உலக மக்களின் மன ஓட்டத்துடனும், இதய துடிப்புடனும் என்னையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இச் சொல்லொணா துயரத்தின் மத்தியிலும் மனதிற்கு தெம்பை அளிக்கும் செய்தியானது, தென் ஆபிரிக்க நாடானது இவ்வுலகிற்கு என்றும் அழியாப்புகழ் பெற்ற ஒரு மாமனிதனை தந்தது என்பதுதான். தனது நண்பர்களாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, உண்மை, சகிப்புத் தன்மை, அன்பு என்பவற்றை அவர்கள் மீது காட்டிய நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்வியல் தத்துவமானது, குழப்பத்தில் துவண்டுபோய் இருக்கும் இவ்வுலகிற்கு உத்வேகத்தைக் கொடுக்கும் உந்துசக்தியாக அமையும்.

இத் துன்பகரமான சந்தர்ப்பத்தில், இலங்கை மக்கள் சார்பிலும், அதிலும் குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் சார்பிலும், மேதகு உங்களுக்கும், தென் ஆபிரிக்க நாட்டு மக்களுக்கும், தென் ஆபிரிக்காவின் நேசத் தந்தை நெல்சன் மண்டேலா அவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது ஆத்மாக்கள் நிர்கதியற்ற அநாதைகளாக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

அன்னாரது வாழ்வின் அதிர்வலைகள் கோடானகோடி மக்களின் இதயங்களில் ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

Related Posts