Ad Widget

நெற் கபேகளில் மூடிய அறைக்கு தடை

cafe-netயாழ்.மாவட்டத்தில் செயற்படுகின்ற “நெற் கபே’ (Net Cafe) களில் மூடிய அறைக்குள் வைத்து கணினிகள் பாவிப்பதைத் தடை செய்வது என்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பருத்தித்துறை பிரதேச சபையின் எதிரணித் தலைவர், யாழ்.மாவட்டத்தில் இயங்கி வருகின்ற பெரும்பாலான இணையச் சேவை நிறுவனங்கள் (“நெற் கபே’க்கள்) மூடிய அறைக்குள்ளேயே கணினிகள் பாவிக்க அனுமதிக்கின்றனர்.

இதுவும் எமது பிரதேசத்தின் கலாசாரச் சீரழிவு நடவடிக்கைக்கு காரணமாகின்றது. எனவே அதனைத் தடைசெய்து திறந்த வெளியில் கணினிகள் பாவிப்பதற்குரிய ஒழுங்கு முறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

Related Posts