Ad Widget

நெதர்லாந்திடம் சிறைகளை வாடகைக்கு எடுக்கிறது நார்வே

நார்வேயின் சிறைக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டுவரும் நேரத்தில், அருகே உள்ள நெதர்லாந்து நாட்டின் சிறைகளை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுவருவதாக நார்வே அரசு கூறுகிறது.

140909140335_norway_prison_skien_epa

நார்வேயில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைகளில் இடம் கிடைக்கும் வரை, சிறைத் தண்டனையை அனுபவிக்கக் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது .
தற்போது நார்வேயில் சுமார் 1,300 பேர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இடம் கிடைக்காமல் காத்திருக்கிறார்கள்.

பெல்ஜியத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த நாட்டு சிறைகளில் இடமில்லாத காரணத்தால், சிறை தண்டனை அனுபவிக்கவேண்டிய கைதிகளுக்கு தனது நாட்டில் சிறைகளை வாடகைக்குத் தர நெதர்லாந்து ஏற்கனவே பெல்ஜியத்துடன் ஒரு ஒப்பந்தமிட்டிருக்கிறது.

பெல்ஜியம் நாட்டு மக்களில் சுமார் பாதிப்பேர் டச்சு மொழி பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் நார்வேயுடனான இந்த ஏற்பாடு மாறுபட்டதாக இருக்கும் என்று நெதர்லாந்து கூறுகிறது. ஏனென்றால், நார்வே ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடல்ல. மேலும் நார்வே மக்கள் வேறு ஒரு மொழி பேசுபவர்கள்.

Related Posts