நீதிபதி இளஞ்செழியனுடன் அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு!

யாழ்ப்­பாணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழி­யனை இலங்­கைக்­கான அமெ­ரிக்­கத்­ தூ­துவர் அப்துல் கேசாப் சந்­தித்து கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டி­ருந்தார். இச்சந்திப்பு சுமார் ஒரு மணி­நேரம் இடம்­பெற்­றது.

நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்கி பிரயோக சம்பவத்தில் கொல்­லப்­பட்ட பொலிஸ் சார்­ஜ­ன்டினது மனை­வியின் காலில் வீழ்ந்து நீதி­பதி அழுத காட்­சியை பார்­வை­யிட்ட அமெ­ரிக்­கத்­தூ­துவர், தாம் இதைக்கண்டு மனம் நெகிழ்ந்­த­தாக தனது டுவிட்டர் தளத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த நிலை­யி­லேயே கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­பாக அமெ­ரிக்­கத்­தூ­துவர் கொழும்பில் வைத்து நீதி­ப­தியை சந்தித்தி­ருந்தார். இக்கலந்­து­ரை­யா­டலில், அமெ­ரிக்­கத்­தூ­துவர் நீதி­ப­தி­யினை கண்­டதும் அவரை கட்­டி­ய­ணைத்து கைலாகு கொடுத்­தி­ருந்தார். மேலும் துப்­பாக்கிச்சூட்டுச் சம்­ப­வத்தில் நீதி­பதி என்ற நிலையில் இருந்தும் கூட நீங்கள் நடந்து கொண்­ட­விதம் அனைத்­தையும் தான் பார்த்­த­தா­கவும் அதனால் தான் மிகுந்த மன­நெ­கிழ்ச்சி அடைந்­த­தா­கவும் இதன்­போது அமெ­ரிக்­கத்­தூ­துவர் நீதி­ப­திக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

மேலும் அமெரிக் ­கத்­ தூ­துவர் என்ற வகையில் தன்னி டம் என்ன உத­வி கள் வேண்­டு­மெனி னும் தன்னைத் தொடர்புகொள்­ள லாம் என்றும் நீதி­ப­தி­யிடம் அவர் உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

Related Posts