நீதிபதி இளஞ்செழியனுக்கு கடிதம் எழுதிவைத்தபின் சாவு!

அப்பா எப்ப வருவார்?
அப்பா கண் திறந்துவிட்டாரா? எப்ப பார்ப்பார்?
ஏன் வரவில்லை?
போஸ்ட்மோடத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு, எங்கட அப்பா வெள்ளைதானே? ஏன் கறுத்தவர்?
அப்பா வர நாங்க பாக்குக்கு போவம்

யாழ்ப்பாணத்தில் நேற்திறயனம் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட இளம் தாய், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

குறித்த கடிதத்தில்

மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “எனது கணவர் கடன் கொடுத்து ஏமார்ந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இல்லாதா வாழ்க்கையை வாழ முடியவில்லை. பிள்ளைகளுக்காக வாழலாம் என நினைத்தால், அப்பா எப்ப வருவார்? அப்பா கண் துறந்துட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.

எனது கணவரின் தற்கொலைக்கு ஸ்ரீசங்கர் அவர் மனைவி சுகன்ஜா மற்றும் ஸ்ரீசங்கரின் தம்பி ஸ்ரீதரன் ஆகியோரே காரணம் தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்பது போல நாங்கள் இந்த நிலைக்கு வர இவர்களே காரணம்.

உயிரை விட மேலானது எதுவுமில்லை எங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க, கடவுள் ஒரு சிலரையே சத்தியத்தை காப்பாற்ற இந்த பூவுலகத்தில் படைத்துள்ளார். அந்த வகையில் நாங்கள் உங்களை நினைக்கின்றோம். இந்த வழக்கை தங்களின் பார்வையின் கீழ் எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் பிறந்தவர்கள் யாவரும் இறப்பவர்களே. ஒன்றை மட்டும் நினைத்து ஆறுதல்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி உள்ளீர்கள். என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே.

நாங்கள் குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதி வரை அதற்காக போராடினோம். முடியவில்லை. போகின்றோம். என்னுடையதும் என் பிள்ளைகளினதும், இறுதி சடங்கை என் வீட்டார் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் என் கணவன் வீட்டு பகுதிக்கு கொடுக்க வேண்டாம். இதுவே என் விருப்பம். எம் மரண வீட்டை மிகவும் எளிமையாக மேளம் போஸ்மார்ட்டம் இல்லாமல் உடனடியாக எடுக்கவும்” என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

Related Posts