Ad Widget

நிலாவரை கிணற்றில் குதித்தவரை காணவில்லை

புத்தூர், வரலாற்று பிரசித்தி வாய்ந்த நிலாவரை கிணற்றில் குதித்த முதியவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (23) மதியம் 12:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கற்கோவளம் பருத்தித்துறை பகுதியினை சேர்ந்த சரவணமுத்து தேவதாசன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு கிணற்றில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த முதியவர் கிணற்றில் பாய்ந்துள்ளார். அவ்விடத்தில் நின்ற இளைஞர்கள் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்த போது குறித்த முதியவர் நீரில் மூழ்குவதை கண்டுள்ளனர்.

மேற்படி முதியவர் யாழ். பல்கலைகழகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக கடமையாற்றியுள்ளார். இவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் குதித்தாரா? அல்லது அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக குளிப்பதற்காக குதித்தாரா? என இதுவரை அறியப்படவில்லை.

சடலத்தினை மீட்பதற்கு கடற்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts