Ad Widget

நிலவுக்கு கொண்டு சென்ற சீன விதைகள் முளைத்தன

சீனாவின் சாங் இ–4 விண்கலம் மூலம் நிலவுக்கு எடுத்துச் செல்லபட்ட விதைகள் தளிர்விட்டிருப்பதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

நிலவில் எந்த ஒரு உயிரியல் பொருளும் முளைவிட்டிருப்பது இது முதல் முறை என்பதோடு, நீண்டகால விண்வெளி ஆய்வுகளுக்கு இது முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.

பூமிக்கு தொலை தூரத்தில் இருக்கும் நிலவின் மறுபக்கத்தில் சாங் இ–4 விண்கலம் முதல் முறை தரையிறக்கப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அங்கு தரையிறங்கிய இந்த விண்கலம் அந்த பிராந்தியத்தின் நிலவியல் தன்மையை ஆராய்ந்து வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தாவரங்கள் வளர்க்கப்பட்டபோதும் நிலவில் இதுவே முதல்முறையாகும். இது செவ்வாய் கிரகம் போன்ற நீண்ட தூர விண்வெளி பயணங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதன்மூலம் விண்வெளி வீரர்களுக்கு தமது உணவை அங்கேயே அறுவடை செய்யவும் வாய்ப்பை ஏற்பத்தியுள்ளது.

நிலவில் தரையிறங்கிய இந்த விண்கலம் பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு விதைகளை எடுத்துச் சென்றது. விண்கலத்தில் மூடப்பட்ட கொள்கலனில் இந்த விதைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பருத்தி விதைகள் தற்போது மொட்டுகளாக தளிர்விட்டிருப்பதாக சீன அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

Related Posts