Ad Widget

நியமனம் பெறாத பட்டதாரிகள் மற்றும் HNDIT, HNDE பட்டதாரிகள் விபரங்களை கோருகிறது மாகாண கல்வி அமைச்சு

graduationபட்டதாரி பயிலுனர் சேவையில் கடந்த வருடம் உள்வாங்கப்படாத பட்டதாரிகள் தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பட்டம்பெற்று பட்டதாரி பயிலுனர் சேவையில் உள்வாங்கப்படாதவர்களை 18ஆம் திகதிக்கு முன்னர் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டள்ளனர்.

மேற்படி பாடநெறிகளை கற்பிப்பதில் வெற்றிடங்கள் நிலவுவது தொடர்பான விடயங்கள் அமைச்சரவர்களுக்கு தெரியப்படுத்தப்படுத்தப்பட்து.இதனையடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சர், வட மாகாண ஆளுநர் உள்ளிட்டோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே நியமனம் பெறத் தவறிய பட்டதாரிகளின் விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏனைய திணைக்களங்களில் முகாமைத்துவ உதவியாளர்களாகவும் திட்ட அலுவலர்களாகவும் தற்சமயம் கடமையாற்றுவோர் ஆசிரிய சேவையில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினால் தமது விபரங்களை உள்ளடக்கிய விண்ணப்பங்களை 18 திகதிக்கு முன்னதாக வட மாகாண கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் உயர்தொழில் நுட்ப நிறுவகத்தில்(ATI) தகவல்தொழில்நுட்பம்(HNDIT) மற்றும் ஆங்கிலம்(HNDE) ஆகிய துறைகளில் இளநிலைப்பட்டங்களை பெற்றவர்கள் ஆசிரியர்சேவையில் உள்ளீர்க்கப்பட உள்ளதால் அவர்களையும் 18ம் திகதிக்கு முன்பதாக தமது விபரங்களை வட மாகாண கல்வி அமைச்சில் பதிவுசெய்யுமாறு வேண்டப்பட்டுள்ளனர்

Related Posts