சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு தொல். திருமாவளவன் நேரில் அஞ்சலி!

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

Related Posts