Ad Widget

நாவாந்துறை வாள் வெட்டு சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது

arrest_1நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல் விக்ரமராச்சி தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பொம்மைவெளி பகுதியில் கடந்த 27 ஆம் திகதி புதன்கிழமை வயோதிபர் ஒருவர் மீது அசிட் வீசப்பட்டதுடன் வாள் வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டது.

முன் விரோதம் காரணமாக குறித்த வயோதிபர் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இச்சம்பவத்தில், அதே இடத்தினைச் சேர்ந்த அப்துல் காதர் முகம்மது அலிம் நிஹார் (வயது 53) என்ற வயோதிபர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொண்ட வேளை, 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அதில் பிரதான சந்தேக நபர் புத்தளம் பகுதியில் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

குறித்த சம்பவத்திற்கு முச்சக்கரவண்டி கொடுத்த உதவிய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில் பிரதான சந்தேக நபர் நாவாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த வேளையில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts