Ad Widget

நாளை விமல் வீரவன்ச யாழிற்கு விஜயம்

vimal-weravansaதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவன்ச நாளை செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

யாழ்.குருநகர் தொடர்மாடி வீடமைப்பு திட்டத்தின் புனர்நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைப்பதற்கே அவர் யாழிற்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் ஐனசெவன’ எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த தொடர்மாடி வீடமைப்பு திட்டம் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ளது.

கடந்த கால யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் குருநகரில் 5 மாடிகளைக் கொண்ட 160 குடியிருப்புகள் வெகுவாகப் பாதிக்கபட்டன.

இவ் வீடமைப்புத்திட்டத்தில் உள்ள கட்டிடங்கள், மற்றும் அடிப்படை வசதிகள், முற்றுமுழுதாக சேதமடைந்து காணப்படுகின்றன.

யுத்தம் காரணமாக கட்டிடங்களும் கழிவுநீர், மலசலகூட குழிகள், நீர்த்தாங்கிகள் சேதமடைந்து காணப்படுகின்றன.

இவ் வீடமைப்புத்திட்டம் 1986ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள 160 குடும்பங்களுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்பாணத்தில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடியும் உயர்ந்த 5 மாடிகளைக் கொண்ட கட்டிடம் இதுவாகும். இத் திட்டத்தில் 8 கட்டடங்கள் அடங்குகின்றன.

அமைச்சர் விமல் வீரவன்சவின்சவின் வேண்டுகோழுக்கிணங்க 77 மில்லியன் ரூபாவை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இத் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளது.

இத் திட்டம் 9 மாத காலத்திற்குள் பூரணப்படுத்தப்பட்டு மீள மக்களிடம் கையளிக்கப்படும்; என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

குருநகர் தொடர்மாடி வீட்டுத்திட்டத்தை புனரமைக்குமாறு கோரிக்கை

Related Posts