Ad Widget

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் செயலர்,

அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொதியொன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது இலாபமீட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல. அரிசியின் விலை அதிகரிப்பால் நாம் ஏற்கனவே உள்ள விலையில் உணவினை விற்பதற்குச் சிரமப்படுகின்றோம்.

இனிவரும் காலங்கயில், மரக்கறி உணவுப்பொதியொன்று 100 ரூபாவிலிருந்து 110ரூபாவிற்கும், மீன் உணவுப்பொதியொன்று 130 ரூபாவிலிருந்து 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்து. அத்துடன் கோழி உணவுப்பொதியொன்று 160 ரூபாவிலிருந்து 170 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அரிசியின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. இதன்காரணமாக அரிசியின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. சிலர் களஞ்சியப்படுத்தும்போது பெருமளவு அரிசியை சந்தைக்கு கொண்டுவராமல் பதுக்கிவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது விலங்குகளுக்கான உணவிலும் பாரிய தட்டுப்பாடு நிலவுகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க முறையான திட்டமிடல் அவசியமாகும்.

எனவே இலங்கை நுகர்வோர் சபைக்கு நாம் ஒரு சவாலை முன்வைக்கின்றோம். முடியுமானால் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு பதுக்கி வைத்துள்ள அரிசி முட்டைகளை மீட்டுக்காட்ட வேண்டும் என்றார்.

Related Posts