Ad Widget

நாட்டில் வேகமாக அதிகரிக்கிறது ‘எய்ட்ஸ்’!

2015 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் நாட்டின் சகல பகுதிகளிலும் 58 புதிய ‘எய்ட்ஸ்’ நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குநர் டாக்டர் சிசிர லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தப் புள்ளி விவரங்கள் கிடைக்கப்பெற்றன எனவும் அவர் தெரிவித்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் எய்ட்ஸ் நோயாளி இலங்கையில் அடையாளம் காணப்பட்டமையைத் தொடர்ந்து இதுவரை 2 ஆயிரத்த 138 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 340 பேர் இறந்து விட்டனர்.

ஆனால் உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையில் மூவாயிரத்து 600 எய்ட்ஸ் நோயளிகள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயாளிகள் என அடையாளம் காணப்பட்டவர்களில் 65 வீதமானோர் பெண்கள் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Posts