Ad Widget

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம்: ஜனாதிபதி

நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத வகையில் அனைத்து மக்கள் மத்தியிலும் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதே இந்த அரசின் நோகம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமாக இந்தோனேஷியா சென்றுள்ள ஜனாதிபதி இந்தோனேஷியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை தூதுவர் அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் சந்தித்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பாக சிலர், இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு பிழையான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அந்த போலிப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாமென, தான் வெளிநாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

தாய் நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கையை கட்டியெழுப்ப உள்ளதாகவும் அதற்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கை அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு 40 வருடங்களுக்கு பின்னர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Related Posts