Ad Widget

நாட்டில் டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளது!!

நாட்டில் பரவலடைந்துள்ள டெல்டா திரிபின் மற்றுமொரு வகை கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூற்று பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் புதிதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.104 என அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாட்டில் முன்னதாக கண்டறியப்பட்ட டெல்டா மாறுபாடு B.1.617.2.287 என அடையாளப்படுத்தப்பட்ட நிலையிலே, தற்போது அதன் புதிய வகை கண்டறியப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் உயிரியல் மூலக்கூற்று பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts