Ad Widget

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தே போட்டி! எவரிடமும் பேச நாம் தயாரில்லை!!

“எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்துப் போட்டியிடும்” என்று கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

kajrndakumar

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

எவரிடமும் பேசுவதற்கு நாம் தயாரில்லை. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்தே போட்டியிடுவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை ஒரு நாளும் வெற்றியளிகாது. அதிகாரங்கள் பங்கிடப்பட்டாலும் அதை மீண்டும் இலங்கை அரசு கைப்பற்றக்கூடும்.

எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளை வைத்து தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிட முடியாது. இலங்கையில் தமிழர், சிங்களவர்களுக்கென இரண்டு தேசங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழருக்கென்று தனியான தேசம் அமைந்து சமஷ்டி முறைமை உருவாக்கப்படவேண்டும் என்பது எமது கட்சியின் இலக்காக இருந்து வருகின்றது.

அப்போதுதான் தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் இந்த நாட்டில் வாழ முடியும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதனையே முன்னிறுத்தி எங்களுடைய காய்நகர்தல் இருக்கும். அத்துடன், இது எங்களுடைய இலக்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழ்த் தேசியத்தின் நிலைப்பாடாகும். அதனடிப்படையில்தான் நாங்களும் எங்களுடைய தீர்மானங்களை எடுத்து வருகின்றோம்.– என்றார்.

Related Posts