Ad Widget

நாகர்கோவில் பகுதிக்கு புதிய பஸ்சேவை

bus pபருத்தித்துறையில் இருந்து வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதிக்கு தனியார் பஸ் சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே உடனடியாக குறித்த பகுதிக்கு போக்குவரத்துச் சேவையினை ஆரம்பிக்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாராட்சி கிழக்கு நாகர் கோயில் பகுதியில் 10 வருடங்களுக்குப்பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதிக்குச் செல்வதற்கு மக்கள் பருத்தித்துறை – மருதங்கேணி பிரதான வீதிக்கு 3 கிலோ மீற்றருக்கு நடந்து வந்த பயணம் செய்யவேண்டிய நிலையே காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையைக் கருத்திற்கொண்டு அப்பபிரதேசத்திற்கான போக்குவரத்து வசதியை மேற்கொண்டு தருமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து குறித்த பகுதிக்கு போக்குவரத்து வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்தினை மந்திகையூடாக உடனடியாக வடமராட்சி கிழக்கு தனியார் பஸ் சங்கத்துடன் இணைந்து முன்னெடுக்க வேண்டுமென்றும் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் நன்மைகருதி நாளொன்றுக்கு மூன்று தடவைகள் இச்சேவைகள நடாத்த வேண்டுமென்றும் துறைசார்ந்தோரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ் மாநர சபை முதல்வர் திருமதியோகேஸ்வரி பற்குணராஜா, மருதங்கேணி பிரதேச செயலர் திருலிங்கநாதன், பருத்தித்துறை பிரதேச செயலர் ஜெயசீலன் மற்றும் பிரதேச வாழ் மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts