இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடற்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவே ஞாயிற்றுக்கிழமை (26) முதல் சேவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
படகுச் சேவை வழங்குநர் நிறுவனம், மோசமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, நேற்று முதல் நாளை செவ்வாய்கிழமை வரையிலான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
வருடாந்த சேவை இடைநிறுத்தம் நவம்பரில் ஆரம்பமாவதற்கு முன்னர், அக்டோபர் 28 ஆம் திகதி வரை சேவையை இயக்க அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது.