Ad Widget

நவற்கிரிப் பகுதியில் மூலிகைத் தோட்டம்

mulikaiபுத்தூர், நவற்கிரிப் பகுதியில் வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தால் 10 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுதேச வைத்திய திணைக்களத்தின் சியாமா துரைரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இந்த மூலிகைத் தோட்டத்தை திறந்துவைத்தார்.

நவற்கிரிப் பகுதியில் உள்ள அரசாங்கக் காணியில் மூலிகைத் தோட்டம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த வருடம் செய்யப்பட்டிருந்தன. இதற்கு அமைய இந்தக் காணியில் காணப்பட்ட முருகைக்கற்கள் அகற்றப்பட்டு மூலிகைக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.

இந்தத் தோட்டத்தில் 500 இற்கும் மேற்பட்ட மூலிகைக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இனிவரும் காலத்தில் இந்த மூலிகைக் கன்றுகள் மூலம் மருந்துகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்குரிய விற்பனைக்கூடமும் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், சுதேச வைத்திய திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts