Ad Widget

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் மலர்க் கண்காட்சி : மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள்

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாபெரும் மலர்க் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்கும் இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) நாளை வியாழக்கிழமை (05.11.2015) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இதனை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்க உள்ளார்.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு விற்பனையும் செய்யப்படவுள்ளன.

05.11.2015 (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும் இக்கண்காட்சி 11.11.2015 (புதன்கிழமை) வரை ஒருவார காலத்துக்குத் தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது.

தினமும் இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts