Ad Widget

நல்லூர் உற்சவம் தொடப்பில் விசேட கலந்துரையாடல்

meetingநல்லூர் கந்தசாமி கோயில் உற்சவகால நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் சனிக்கிழமை யாழ். மாநகர சபையில் நடைபெற்றது.

சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் மிகச்சிறப்பான முறையில் இந்த உற்சவ காலத்தில் கடைப்பிடிக்கவேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக கடந்த காலத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தபோதும் பொதுமக்களின் உடமைகளுக்கு எதுவித பாதிப்புக்கள் இல்லாமல் பொலிஸார் சிறந்த முறையில் கடமையாற்றியுள்ளனர். அதேபோன்று இவ்வருடமும் பொலிஸார் தங்கள் சேவையை வழங்கவேண்டும் என்று ஆலய அறங்காவலர் சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இங்கு வருகை தந்திருந்த யாழ். பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா இவ்வருடமும் நல்லூர் ஆலயத்தில் விசேட பொலிஸ் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் சீருடையுடனும் சிவில் உடைகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்தார்.

அத்துடன் ஆலயத் திருவிழா காலத்தில் போக்குவரத்து மற்றும் மலசல கூட வசதிகள், வீதித்தடைகள், ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள் கால்களைக் கழுவிக்கொண்டு செல்லக் கூடிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நல்லை ஆதின குரு முதல்வர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர், மாநகர சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts