Ad Widget

நல்லூரில் மாநகரசபை ஊழியர்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

nallur-arpaddamமாநகரசபை துப்புரவு பணியாளர் ஒருவரை பொலிஸார் தாக்கியமையைக் கண்டித்து மாநகரசபை துப்புரவு பணியாளர்கள் நேற்று இரவு 8.30 மணியளவில் நல்லூர் வைமன் வீதியில் ஒன்றுகூடி பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனல் இரண்டுமணி நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

நல்லூர் கோயிலில் துப்புரவுப்பணியில் ஈடுபடும் மாநகரசபை ஊழியர் ஒருவரை நேற்று மாலை பொலிஸார் முட்டுக்காலில் நிறுத்தி வைத்து தாக்கியுள்ளதுடன் அவரை கைதுசெய்துள்ளனர்.இதனையடுத்து நல்லூர் வைமன் வீதியில் ஒன்றுகூடிய துப்புரவு பணியாளர்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் துப்புரவு பணியாளர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கைதுசெய்துள்ள ஊழியரை விடுதைலை செய்யும் வரை தாம் நல்லூர் கோயில் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபடுவதில்லை எனத் தெரிவித்தமையடுத்து பொலிஸார் கைது செய்த ஊழியரை விடுதலை செய்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து மாநகரசபை துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts