Ad Widget

நல்லாட்சி உருவாகியிருப்பினும் வடக்கு மக்கள் அச்சத்துடனே வாழ்கின்றனர் – அனந்தி

இலங்கை அரச படையினரின் இரகசிய சித்திரவதை முகாம்களில் தமிழ் இளைஞர், யுவதிகள் பலர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் நம்புவதாக வடக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தென்பகுதி மாநிலமான கர்நாடகாவின் பெங்களூர் நகரில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பெண்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாடொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்தத் தகவலைக் கூறியுள்ளார்.

இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்த பின்னர் சமாதானமும், நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Posts