Ad Widget

நயினாதீவில் மினி சூறாவளி – 06 குடும்பங்கள் பாதிப்பு!

நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நயினாதீவு வடக்கு ஜே 35 கிராம சேவகர் பிரிவில் வீசிய மினி சூறாவளியின் தாக்கத்தினால் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் குறித்த பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts