Ad Widget

நஞ்சு பழங்களை விற்கவேண்டாம்; வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

வலி. தெற்கு (உடுவில்) பிரதேச சபைக்குட்பட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் நஞ்சாகும் வகையில் இராசாயன மருந்து பாவிக்காமல் விற்பனை செய்வதற்கு பழ வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் தியாகராசா பிரகாஸ் செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.

4(1966)

இது தொடர்பிலான கலந்துரையாடல் பிரதேச சபை மண்டபத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற போது, அதில் 75 இற்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்களிடம், பழங்கள் நஞ்சாகும் வகையில் இரசாயனப் பதார்த்தங்களை பழங்களில் உபயோகிக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, சிலர் தாங்கள் வாழைக் குலைகளுக்கு புகையூட்டுவதாக ஒப்புக்கொண்டனர். இருந்தும், நஞ்சு மருந்துகள் பாவித்து பழங்களைப் பழுக்க வைப்பதில்லையெனத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துரை வழங்கிய உடுவில் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அ.ஜெயக்குமரன், பழங்களை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தொடர்பிலும் நுகர்வோரிற்குப் பாதிப்பு ஏற்படாத பழங்களை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், பழங்களுக்கு நஞ்சூட்டும் வகையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார் என தவிசாளர் மேலும் கூறினார்.

Related Posts