Ad Widget

தொழில் நுட்பத்தின் உதவியுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடி

தாய்லாந்தில் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு எழுதியவர்களில் மூவாயிரம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

_thailand_exam_spy-cammera

கேமராக்கள் மற்றும் ஸ்மார்ட்-வாட்ச்சுகளின் துணையுடன் மிகவும் நூதனமான முறையில் மாணவர்கள் தேர்வு மோசடியில் ஈடுபட்டுள்ளதை பல்கலைக்கழகம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

மூக்குக் கண்ணாடிகளில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணிய கேமரா மூலம் தேர்வுத் தாளை மூன்று மாணவர்கள் படம்பிடித்துள்ளதாக பாங்காக்-இன் ராங்ஸிட் பல்கலைக்கழகம் கூறுகின்றது.

அப்படி பிடிக்கப்பட்ட படங்கள், வெளியில் உள்ள குழுவொன்றுக்கு அனுப்பப்பட்டு- அந்தக் குழு சரியான விடைகளை, ஸ்மார்ட்-வாட்ச்சுகளை அணிந்திருந்த வேறு மூன்று மாணவர்களுக்கு அனுப்பியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வுக்கு சரியான பதில்களை பெறுவதற்காக 24 ஆயிரம் டாலர் பணத்தை தான் கொடுத்துள்ளதாக தேர்வு எழுதிய ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

Related Posts