Ad Widget

தொடரும் பல்கலைக்கழக மாணவர் மீதான தாக்குதல்கள்

jaffna-universityஇனந்தெரியாத நபர்களினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மற்றும் கலைப்பீட மாணவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் 3 பல்கலைக்கழக மாணவர்கள் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் இலக்காகியுள்ளனர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நல்லூரடியில் உள்ள யாழ்.வலயக் கல்லி அலுவலகத்திற்கு முன்பாக வைத்து சட்டத்துறையில் கல்விபயிலும் சிங்கள மாணவர்கள் இருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக யாழ் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமையும் யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்துவ பீடத்தில் கல்விபயிலும் தமிழ் மாணவர் ஒருவரும் இனந்தரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் நேற்றும் முன்தினமும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts