Ad Widget

தைவானில் எரிவாயுக் குழாய் வெடிப்பு: 24 பேர் பலி

தைவானின் தென்பகுதி நகரமான கவ்ஷியூங்கில் தொடர்ச்சியாக நிகழ்ந்த எரிவாயு வெடி விபத்தில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 270 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தின் காரணமாக கார்கள் ஆங்காங்கே தூக்கியெறியப்பட்டன. சாலைகளில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

taiwan_exlposions

எரிவாயுக் கசிவுக்கான சரியான காரணம் தெரியவில்லை. குழாய்களில் ஏற்பட்ட கசிவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நிகழ்ந்த பகுதியில் எடுக்கப்பட்ட காட்சிகளில் பெரும் தீப்பிழம்பையும் வாகனங்கள் கவிழ்ந்துகிடப்பதையும் பார்க்க முடிந்தது. இடிபாடுகளுக்கு இடையில் உடல்கள் கிடப்பதும் தெரு இரண்டாக பிளந்து கிடப்பதும் அந்தப் புகைப்படங்களில் காணக்கிடைக்கிறது.

street_taiwan_cars

வியாழக்கிழமையன்று இரவில் இந்த விபத்து நிகழ்ந்தது. மிகப் பெரிய தீப்பந்து வானில் எழுந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்தது ஐந்து வெடிப்புகள் நிகழ்ந்ததாக தைவான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

“வியாழக்கிழமை இரவில் எரிவாயுக் கசிவு ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் தீயணைப்புத் துறைக்கு அழைப்பு வந்தது. அதன் பிறகு நள்ளிரவுவாக்கில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெடிப்புகள் நிகழ்ந்தன. இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது” என தேசிய தீயணைப்புத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயுக் கசிவு குறித்து ஆய்வுசெய்த நான்கு தீயணைப்புத் துறையினரும் இந்த விபத்தில் கொல்லப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமையன்று காலையில் பெருமளவில் தீ அணைக்கப்பட்டுவிட்டது.

இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கியிருக்கிறார்களா என தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர்.

இந்த வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் கழிவுநீர் குழாய்களுக்கு இணையாக தங்களது குழாய்களையும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் பதித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிவாயு கசிவுக்கான காரணம் தெரியவல்லை என்றும், புரோபலீன் வாயு கசிந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் சாங் சிய-சூ தெரிவித்துள்ளார்.

Related Posts