Ad Widget

தேர்தல் விதியை மீறி நேற்று செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

jaffna-bouயாழ்ப்பாணம் செயலகத்தில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலகத்தின் முன்பாக நேற்று திடீரென ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டவரான எம்.என். சீராஸ் என்பவரின் ஆதரவாளர்கள் என தம்மைக் கூறிக்கொண்டோரால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று மாகாண சபைகளுக்கும் செப்ரெம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்த பின்னர் அரசியல் ஊர்வலமோ, பேரணியோ நடத்தக்கூடாது என்பது விதியாக இருந்தபோதும் நேற்றைய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கவோ கலைக்கவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

பதிலாக ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார் அதனை வேடிக்கை பார்த்து நின்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்களை இடைமறிக்கவோ, கைது செய்யவோ பொலிஸார் முயற்சிக்கவில்லை.

மதியம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது. இதன்காரணமாக ஏ9 வீதிஊடான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டது.

எனினும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரரைத் தடுக்கவோ, கலைந்து செல்லுமாறு பணிக்கவோ இல்லை. பதிலாக அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பாணியில் நின்றிருந்தனர்.

மாகாண சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னரான நாள்கள் தேர்தல் காலப்பகுதியாகவே கருதப்படும். இந்தக் காலப்பகுதியில் ஊர்வலங்களோ, பேரணிகளோ நடத்த முடியாது எனத் தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தப் பொலிஸார் இவ்வாறு தயங்குவது, வடமாகாண சபைத் தேர்தல் எவ்வாறு இடம்பெறப்போகின்றது என்பதற்கான முன் உதாரணம் என்று தேர்தல் அவதானிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி

யாழில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி

Related Posts