Ad Widget

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்: ஐ.தே.கவுடன் கோட்டா தரப்பு டீல் – வெளியானது முக்கிய தகவல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவு அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் இந்த முயற்சி ஆரம்பமாகிவிட்டதாக கொழும்பு டெலிகிராவ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து கோட்டாபய ராஜபக்ஷ சிந்தித்து வருகின்றார் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தை 2020 பெப்ரவரியில் கலைக்கலாம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கருதுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷவு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் கொழும்புடெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இதற்கான வாய்ப்புகள் இன்னமும் வெகுதொலைவில் உள்ள போதிலும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமருக்கும் இடையிலான புரிந்துணர்வு அதிகரித்து வருவதாகவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவுவின் ஜனாதிபதி கனவுகளிற்கு பிரதமரும் திலக் மாரப்பன சாகல ரத்நாயக்கவும் சிறந்த முறையில் உதவி வருகின்றனர் எனவும் கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

Related Posts