Ad Widget

தேசிய விளையாட்டு விழா 2016 இல் யாழ்ப்பாணத்தில்

2016ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு விழா யாழ்.மாவட்டத்தில் நடைபெறவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ranil-jaffna2

நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ரணில் தனது பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்.மாவட்டத்திற்கு சென்றிருந்த போது யாழ்.மாவட்ட செயலகத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

தேசியத்தில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் 2016ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.இதனால் தேசிய விளையாட்டு விழாவுக்கு ஏற்ற முறையில் யாழ்ப்பாணத்தில் உள்ள மைதானங்கள் மறுசீரமைப்புச் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts