Ad Widget

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 2வார கால அவகாசம்

இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாணவர்கள் இரண்டு வாரங்களுக்குள் பெறமுடியுமென ஆட்பதிவுத்திணைக்களம், நேற்று (07) அறிவித்துள்ளது.

r_m_s_sarathkumara

இவ்வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முதல் முறையாகத் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களில், 70 ஆயிரம் மாணவர்கள், இன்னும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என ஆட்பதிவுத்திணைக்களம் அறிவித்துள்ளது.

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களுள் தேசிய அடையாள அட்டையும் ஒன்றாகையால், அதனை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள மாணவர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அதிபர்களும் போதிய கவனம் செலுத்தவேண்டும் என ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 31ஆம் திகதி 16 வயதையடையும் மாணவர்கள், பாடசாலை ஊடாக, மே மாதம் 31ஆம் திகதிக்கு முன் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணபிக்க முடியும்.

எனினும் நவம்பர் 30ஆம் திகதி 16 வயதைப்பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கும் ஆட்பதிவுத் திணைக்களம் அடையாள அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ஆயினும், இவ்வருடம் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள 577,084 மாணவர்களில் 370, 772 மாணவர்கள் பாடசாலைப் பரீட்சார்த்திகளாவர். இவர்களில் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் மாத்திரமே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்ததுள்ளனர்.

அவற்றுள் சுமார் 5,900 விண்ணப்பங்கள் முழுமையாகப் பூரணப்படுத்தப்படாது பிழையான தகவல்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன.

இவ்விண்ணப்பங்களை மீள பாடசாலைக்கு அனுப்பி, திருத்திப் பெறவேண்டியுள்ளது. மீதி சுமார் 70 மாணவர்களும் துரிதமாக விண்ணப்பிப்பார்களாயின், அவசா அப்படையில் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவக்கை எடுக்கப்படும்.

16வயதைப் பூர்த்தி செய்தவர்கள், ஒருவருடத்திற்குள் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாய மானதாகும் தவறுவது தண்டணைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts