புடவைக் கடை ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் பல இலட்சக்கணக்கான பெறுமதி வாய்ந்த உடைகள் எரிந்து நாசமாகின.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை சந்தியில் இடம்பெற்றுள்ளது.
திடீரென புடவைக் கடையில் தீப்பற்றி எரிவதைக் கண்ட மக்கள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அத்துடன் யாழ். மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவு உடனடியாக விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
எனினும் தீயில் பெருமளவிலான பொருட்கள் எரிந்து நாசமான போதும் அயலில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.