Ad Widget

தெற்கு தேர்தலில் கூட்டமைப்பு போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை

tnaமார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம் கொழும்பு அரசியல் களத்தில் பெரிதாகப் பேசப்படும் விடயமாக உருவெடுத்து வருகின்றது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்னவென்பதை அறிய தென்னிலங்கை மற்றும் வடக்கு வாழ் தமிழ் மக்கள் பெரிதும் ஆவலாக இருக்கின்றனர்.

கொழும்பு வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் இது தொடர்பில் அதிக அக்கறையைக் கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலையில், மேல்மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது குறித்து அதன் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்ததாவது:

“இது தொடர்பில் தற்போது உடனடிப் பதிலை வழங்க முடியாது. மேல்மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னரே தேர்தலில் களமிறங்குவோமா, இல்லையா என்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் இது தொடர்பில் நாம் பேச்சு நடத்தவுள்ளோம்” – என்றார்.

Related Posts