Ad Widget

தெற்கில் சிறுவர் இல்ல சிறுவனின் மேம்பாட்டுக்கு 14,750 ரூபா ஒதுக்கீடு

child-jaffna-moneyவடக்கிற்கு 398 ரூபா, கிழக்கிற்கு 270 ரூபா மட்டுமே!
இலங்கையில் உள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் சிறார்களின் திறமைகளை விருத்தி செய்வதற்காக தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் உள்ள ஒரு சிறுவனுக்கு ரூபா 14750 ஒதுக்கப்பட்டுள்ள வேளை வடக்கு மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு வெறும் 398 ரூபாவும் கிழக்கில் உள்ள ஒரு சிறுவனுக்கு 270 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை இடம் பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது ஐ.தே.க. எம்.பி ஹசன் எழுப்பிய கேள்விக்கு சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சரினால் சபாபீடத்தில் சமர்ப்பிக்ப்பட்டுள்ள பதிலிலேயே இவ் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கையில் 403 சிறுவர் இல்லங்கள் உள்ளன. இச் சிறுவர் இல்லங்களில் 12925 சிறுவர்கள் உள்ளனர். இவர்களில் பாதுகாப்புக்காக 237.4 மில்லியன் ரூபா 2013 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்குள்ள சிறுவர்களின் திறமைகளை விருத்தி செய்வதற்காக 28.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது.

இதற்கமைய தென்மாகாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் வாழும் சிறுவன் ஒருவனின் திறமை விருத்திக்கு 14,750 ரூபாவும், வடமத்திய மகாணத்தில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு 11,000 ரூபாவும், சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு 1900 ரூபாவும், மத்திய மாகாணத்தில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு 1350 ரூபாவும் மேல்மாகாணத்தில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு 668 ரூபாவும் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு 398 ரூபாவும், கிழக்கு மாகாணத்தில் வாழும் சிறுவன் ஒருவனுக்கு 270 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பதிவில் வடமேல் மாகாணம் உள்ளடக்கப்படவில்லை.

Related Posts