Ad Widget

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பை இணையுமாறு வலியுறுத்தவும்: இந்திய தூதுக்குழுவிடம் ஈ.பி.டி.பி

jaffna_major_yogeswari_CIஅரசியல் தீர்வை காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் இணையுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற குழுவிடம் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யாழ்; இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இதனை ஈ.பி.டி.பி.வலியுறுத்தியுள்ளது.

இச்சந்திப்பின் போது, இராணுவத்தினரின் செயற்பாடு பற்றி இந்தியக் குழுவினர் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்த யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

30 வருடங்களுக்கு பின்னர் மக்கள் சமாதானத்தை அனுபவித்து வருகின்றனர். கடந்த 3 வருடங்களின் பின்னர் மக்களின் சுதந்திரமாக வாழக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னேற்ற கரமான வாழ்வுக்கு அரசாங்கத்தினால் கொண்டு செல்ல முடியும் என்று தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு பாரிய உதவிகளை வழங்கி வருகின்றது குறிப்பாக இந்தியன் வீட்டுத்திட்டம், மற்றும் ரயில் பாதை புனரமைப்பு, வடகடல் நிறுவனத்திற்கான உதவிகள், அச்சுவெலி தொழிற்பேட்டை அபிவிருத்தி போன்ற உதவிகளை இந்திய அரசாங்கம் செய்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்ற தெரிவுக்குழவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்க இந்திய அரசாங்கம் வலியுறுத்தவேண்டும் அப்போது தான் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் இவற்றை நிறைவு செய்ய அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் அதற்கு இந்திய அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையில் இலுவைப்படகுகள் மூலம் இந்திய மீனவர்கள் மீன் பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதால் சிறுதொழில் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது அயல் நாடு என்ற ரீதியில் இந்திய மீனவர்கள் புரிந்துணர்வோடு செயற்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி, நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்துறை பிரதேச சபை தவிசாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்


இடைக்கால நிர்வாக சபையை இந்தியா உருவாக்க வேண்டும்: – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கு கிழக்கை இணைக்கவும்: இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள்

Related Posts